திருத்தணி முருகன் கோயில் ரூ.1.79 கோடி காணிக்கை

 

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.79 கோடி பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டது.  திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 45 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலைக் கோயில் தேவர் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இதில் 100க்கும் மேற்பட்ட கோயில் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று 8 காலை முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில் முடிவில் ரூ.1 கோடியே 79 லட்சத்து மூன்றாயிரத்து 977 ரூபாய், 925 கிராம் தங்கம் மற்றும் 9,802 கிராம் வெள்ளி பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயில் ரூ.1.79 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: