கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

பெரியபாளையம்: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை என்பதால் அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கிருத்திகையை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரிக்கு வந்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சாலையில் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாகவே காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: