மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜூலை 2ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கலெக்டர் த.பிரபுசங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புவனேஸ்வரி ஞானம், வார்டு உறுப்பினர்கள் சுந்தர், ராமச்சந்திரன், சண்முக பிரியா கமலக்கண்ணன், மகேஸ்வரி, ராஜேஸ்வரி ரவிக்குமார், ஊராட்சி செயலர் எழில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி செயலர் முருகன், மாவட்ட கவுன்சிலர், ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ஞானேஸ்வரி, பற்றாளர் செண்பகவல்லி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

காக்களூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பூவண்ணன், வார்டு உறுப்பினர்கள் ஆனந்தபாபு, பிரமிளா, கீதாஞ்சலி, ராஜேஸ்வரி, சுனில்குமார், பிரசாந்த், மகேஸ்வரி, ராகவன், பானு தேவி, குமரன், சித்ரா, செயலாளர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தண்ணீர் குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் தேவிகா தயாளன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவேந்திரன், வார்டு உறுப்பினர்கள் கவுதமன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், மார்ட்டின், ஆசிரியர் குமரன், ராஜன், ராஜமூர்த்தி, கஜேந்திரன், முரளி, நித்தியானந்தம், அன்புதாஸ், அமலநாதன், மகேந்திரன், உதவி திட்ட அலுவலர் சீதாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பற்றாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அபிராமி நன்றி கூறினார்.

கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வசந்தா, வார்டு உறுப்பினர்கள் கோமதி, காவேரி, மேகவர்ணன், பத்மாவதி, சொர்ணா்ம்பிகா, ஊராட்சி செயலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம், அனந்தேரி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொறுப்பு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் செல்லையா, நியாய விலைக்கடை ஊழியர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் போந்தவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு தலைமையிலும், மாம்பாக்கம் ஊராட்சியில் பிரதீப் அசோக் குமார் தலைமையிலும், துணைத்தலைவர் சாந்தா, ஊராட்சி செயலாளர் யோகானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொன்னேரி : மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நெய்தவாயல் ஊராட்சி கொரஞ்சூர் ரெட்டிபாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மரகதம், வட்டார வளர்ச்சி அலுவலக பற்றாளர் மகாலட்சுமி, ஊராட்சி செயலர் மாது, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோனிஷா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி : திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்களில் கிராம பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சந்தானம் உள்ளிட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்று திட்டம் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: