ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

புழல்: ஆந்திர தொழிலதிபரிடம் ₹100 கோடி கடன் பெற்றுத் தருவதாக ₹2 கோடி பணம் பெற்று மோசடி செய்த பிரபல மோசடி கும்பலின் தலைவனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் 13 வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சனிவரப்பு வெங்கட சிவரெட்டி என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் 20ம் ேததி, சென்னை காவல் துறையில் புகார் ஒன்று அளித்தார். அதில், தொழில் வளர்ச்சிக்காக ₹100 கோடி கடன் தேவைப்பட்டது. அதற்காக நண்பர்கள் மூலம் அறிமுகமான உதய கிருஷ்ணா (எ) முகமது தாவூத் கான் என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு நாடு முழுவதும் செல்வாக்கு இருப்பதாகவும், அதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு ₹100 கோடி கடன் பெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

அதற்கு முன் பணமாக ₹2 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று முகமது தாவூத் கான் தெரிவித்துள்ளார். அதன்படி ₹2 கோடி வங்கி மூலமாகவும் மற்றும் நேரில் அளித்தேன். ஆனால் சொன்னபடி எனக்கு கடன் வாங்கி தரவில்லை. அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்ைல. எனவே மோசடி நபரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், ஆந்திர தொழிலதிபரிடம் ₹2 கோடி ேமாசடி செய்த உதய கிருஷ்ணா (எ) உதய பிரகாஷ் (எ) முகமது தாவூத் கான் என்று மூன்று பெயர்களில் சொகுசு கார்களில் வலம் வந்து தன்னை பெரிய தொழிலதிபர் போல் அடையாம் காட்டிக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், முகமது தாவூத் கான் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 5 மோசடி வழக்குகளும், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவுல் 2 வழக்குகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 வழக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 13 மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மோசடி நபரான முகமது தாவூத் கான், செல்போன் சிக்னலை வைத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு சொகுசு கார், 4 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட முகமது தாவூத் கான் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமது தாவூத் கான் தனது நண்பர்களான கார்த்திக், நரசிம்மன் ராமதாஸ், பன்னீர்செல்வம், இம்தியாஸ் ஆகியோருடன் ₹15 கோடி வரை மோசடி செய்துள்ளார். அவர்களில் முகமது தாவூத் கானை தவிர மற்ற 4 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: