டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தர்மபுரி, ஜூன் 27: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 507 காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வும், 1,820 காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் -2ஏ தேர்வும் நடக்கிறது. இந்த ஒருங்கிணைந்த முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் நாளை (28ம்தேதி) முதல் தொடங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில், அல்லது தொலைபேசி எண் 04342-296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: