அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூர், ஜூன் 29: அரியலூர் மாவட்டத்தில் நேற்று 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கலைஞர் நினைவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான பழுதுபார்க்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக் குறித்து ஆலோசிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் வாலாஜா நகரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையராஜா, வாராணவாசியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன்,

தாமரைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதன் தலைவர் பிரேம்குமார், எருத்துக்காரன்பட்டியில் தலைவர் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் தலைவர் முருகேசன், ஓட்டக்கோவில் ஊராட்சியில் தலைவர் செங்கமலை, ராயம்புரத்தில் தலைவர் ராஜகுமாரி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: