காய்கறி சாகுபடி உற்பத்தியை அதிகரிக்க கொரடாச்சேரி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜூன் 29: விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடி மேற்கொண்டு அதன் பரப்பை அதிகரித்து உற்பத்தியை பெருக்குவதற்க்கான ஆலோசனை கூட்டம் தோட்டக்கலை மற் றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் எடக்கீழையூர் கிராமத்தில் நேற்று நட ந்தது. இதுகுறித்து மன்னார்குடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சத்திய ஜோதி கூறியது, மாநில தோட்டக்கலை இயக்குநரின் காணொலி காட்சி அறி வுரையின்படி காய்கறி பயிர்களின் பரப்பு விரிவாக்கம் மற்றும் காய்கறிவிலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து விவசாயிகளும் இவ்வாண்டு காய்கறி சாகுபடிபரப்பை அதிகரிக்க ஆலோ சனை கூட்டம் மற்றும் காய்கறி சாகுபடி பயிற்சி வழங்க அறிவுரை பெறப் பட்டது.

தொடர்ந்து, எடக்கீழையூர் கிராம பஞ்சாயத்தில் தென்னை சாகுபடி பரப்பில் ஊடு பயிராகவும் மற்றும் தரிசு நிலங்களில் காய்கறி சாகுபடி செய் யவும் அனைவரின் வீடுகளிலும் காய்கறி தோட்டம் அமைத்து காய்கறி பயிர் விளைவிக்க கத்தரி, வெண்டை, மிளகாய், கொடிவகை காய்கறிகள், கீரை வகைகள், மலர்கள் சாகுபடி செய்ய சாகுபடி நுணுக்கங்கள் மற்றும் தோட்டக் கலை மற்றும் மலைபயிர்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித் தும் விளக்கமாகவும் விவசாயிகளுக்கு புரியும்வகையில் ஆலோசனை வழங் கப் பட்டது. மேலும், 2024-25ம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் வழங்கப்படும் மாநில வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கத்தரி மற் றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் மானியத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை மூவாநல்லுரில் இருந்து வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விவசாயிகள் தேவையான அடிப்படைஆவண ங்களான கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் அடங்கல், ஆதார் நகர், பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தோட்டக்கலை உதவி இயக் குநர் அலுவலகம் நீடாமங்கல வட்டார அலுவலகத்தில் சமர்ப்பித்து விவசா யிகள் மானியம் பெற்று பயனடையலாம் என்றார். பயிற்சியின் போது, வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் பெரியசாமி, தோட்டக்கலை உதவி அலுவலர் கள் தினேஷ் பாபு, பாலசுந்தரம் மற்றும் சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், தோட்டக் கலை உதவி அலுவலர் கவியரசன் நன்றி கூறினார்.

The post காய்கறி சாகுபடி உற்பத்தியை அதிகரிக்க கொரடாச்சேரி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: