பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் 242 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் மாவட்டத்தில் 242ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண்எடுக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டகலெக்டர் அலுவ லகக்கூட்டஅரங்கில் நேற்று (28ம் தேதி)நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவ லர் வடிவேல் பிரபு, எறை யூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ், பெரம்பலூர் சப்.கலெக்டர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்து பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற் றுவதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் என்றைக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்ட வேண்டும் என்ற பட்டி யலிடப்பட்டு அதனடிப்படை யில் ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டு வருகிறது.

ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும் அரசு நிலங்கள்மீட்டெடுக்கப்பட்டு அப்பகுதியில் மரக்கன்று கள் நடப்பட்டு வருகிறது. குடிசை வீடுகளற்ற தமிழ் நாட்டை உருவாக்கவும், வீடு கள் இல்லாத நபர்களே இருக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்திலும் ”கலைஞரின் கனவு இல்லம்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தின் கீழ் வீடுகளற்ற நபர்கள், குடிசை வீடுகளில் உள்ள நபர்கள் கணக்கெடு க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் குறித்து கிராம மக் களுக்கு விளக்குவதற்காக நாளை (30ம் தேதி) சிறப்பு கிராம சபைக் கூட்ட ங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப் படவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண் டும். அந்த கிராமசபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான பயனாளிகள் பட்டியல் மக்க ளின் பார்வைக்கு வைக்க ப்படும்.

விவசாயிகளின் பயன்பாட் டிற்கு ஏரி- குளங்களில் வண்டல் மண் எடுக்கும் நடைமுறையினை அரசு எளிமைப் படுத்தியுள்ளது. அதனடிப்படையில், பெரம்ப லூர் மாவட்டத்தில் நீர்வள த்துறை கட்டுப்பாட்டிலுள்ள 66 ஏரிகளும்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள 176 ஏரி குளங்கள் என மொத்தம் 242 நீர்நிலைக ளில் வண்டல்மண் எடுத்து க்கொள்ள அனுமதி வழங் கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மழைக் காலத்திற்கு முன்பாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளி லும் மதகுகளின் நிலை குறித்து பொதுப்பணித்து றையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு சிறு பழுது கள்உள்ள மதகுகளை உட னடியாக சரிசெய்ய வேண் டும். குன்னம் மற்றும் வேப்பந்தட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று குன்னம் வட்டத்தில் காடூர், கோவில் பாளையம் மற்றும் அகரம் சீகூர் பகுதிகளிலும், வேப் பந்தட்டை வட்டத்தில் அரும் பாவூர் மற்றும் பூலாம்பாடி பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உர ங்கள் விற்பனை நிலையங் களில் முறையான விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப் படுத்தப்படவில்லை என விவசாயிகளிடமிருந்து புகார்கள்வருகிறது எனவே, வேளாண்மைத்துறை அலு வலர்கள் அவ்வப்போது இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.விலைப்பட்டியல் இல்லாத, அதிக விலைக்கு உரங்கள் விற்கும் விற்ப னை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.விவசாயிகள் கோரிக் கையை ஏற்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத் துறை, கால்நடைத்துறை கையேடுகள் அடுத்த மாதம் வழங்கப்படும் எனத் தெரி வித்தார். முன்னதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட, மனுக்க ளாக அளிக்கப்பட்ட கோரிக் கைகள் மீது சம்பந்தப்பட்ட துறைஅலுவலர்கள் தேவை யான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்டக் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தர விட்டார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் செய ல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரி வாக விளக்கிக் கூறினர். இந்தத் திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங் களுக்கும் விளக்கமளித்த னர். கூட்டத்தில் பெரம்ப லூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண் டியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) ராணி, தோட்டக்க லைத்துறை துணை இயக் குநர் சரண்யா உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் 242 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: