பேரவையில் விசிக வலியுறுத்தல் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம்


சென்னை: ஆணவ கொலைகளை தடுப்பதற்கு ஒன்றிய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று பேரவையில் விசிக எம்எல்ஏ வலியுறுத்தினார். பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செய்யூர் மு.பாபு (விசிக) பேசும்போது,‘‘சாதி ஆவண போக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதை தடுக்க சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும். சாதி ஆணவ கொலையை தடுக்க ஒன்றிய அரசு ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்’’ என்றார்.

இதேபோல், சென்னை தலைமை செயலக வளாகத்தில் விசிக சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தினை ஒன்றிய அரசு இயற்றும் வரை மாநில அரசு ஆணவ படுகொலை தடுப்பதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த கூட்டத்தொடரில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.

The post பேரவையில் விசிக வலியுறுத்தல் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் appeared first on Dinakaran.

Related Stories: