சென்னையில் இந்திரா காந்திக்கு சிலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டப்பேரவையின் அறிவிப்பின் மூலம் இந்திரா காந்திக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற செய்தியை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்த அறிவிப்பின் மூலம் தேசியவாதிகளின் நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பிரதமராக 16 ஆண்டுகாலம் பதவி வகித்து, உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தியவர் இந்திரா காந்தி. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்திக்கு சென்னை மாநகரில் சிலை அமைப்பது மிக மிகப் பொருத்தமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் இந்திரா காந்திக்கு சிலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: