கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி

நீலகிரி: கூடலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சேரம்பாடி சுற்றுவட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏராளமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு பட்டா வழங்க குறைதீர் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

முதற்கட்டமாக 36 வீடுகள் கட்டி முடித்த நிலையில் பயனாளிகள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டனர். தலா ரூ.1.80 மதிப்பிலான வீடுகள் மற்றும் பட்டாக்களை குறைதீர் கூட்டத்திலேயே வசிக்க வீடின்றி தவித்து வந்த 36 குடும்பத்தினருக்கு ஆட்சியர் அருணா வீட்டு மனை பட்டாவுடன் வீடுகளுக்கான ஆணைகளையும் வழங்கினார். தலா ரூ.1.80 மதிப்பிலான வீடுகள் மற்றும் பட்டாக்களை குறைதீர் கூட்டத்திலேயே ஆட்சியர் வழங்கியதால் சேரம்பாடி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடியிருக்க வீடு இன்றி தவித்த தங்களுக்கு இலவச பட்டாவுடன் வீடு கட்டித் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூடலூர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: