திருமுட்டம் பகுதியை காவேரி டெல்டா பாசன பகுதிக்குள் சேர்க்கப்படும்: விசிக சிந்தனை செல்வன் கோரிக்கைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: திருமுட்டம் பகுதியை காவேரி டெல்டா பாசன பகுதிக்குள் மீண்டும் சேர்ப்பது குறித்து தொழில்நுட்பட்ட ஆய்வு குழு பரிந்துரையின் அடைப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர். துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் காட்டுமன்னார் கோவில் தொகுதி உறுப்பினர் சிந்தனை செல்வன் திருமுட்டம் பச்சன் பகுதியை மீண்டும் டெல்டா பாசன பகுதிக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அது தொடர்பான கருத்துருவை அரசு ஏற்றிருக்க கூடிய நிலையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு குழுவின் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். வீராணம் ஏரியை தூர்வாருவது குறித்த கேள்விக்கு தற்போதைய சூழலில் அதற்கு 277கோடி தேவைப்படுகிறது. அரசின் நிதிநிலைக்கு ஏற்ப வீராணம் ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரைமுருகன் உறுதி தெரிவித்தார்.

 

The post திருமுட்டம் பகுதியை காவேரி டெல்டா பாசன பகுதிக்குள் சேர்க்கப்படும்: விசிக சிந்தனை செல்வன் கோரிக்கைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: