குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பந்தலூர் : பந்தலூர் நத்தம் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம்,பந்தலூர் பழைய தியேட்டர் அருகே நத்தம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. தாழ்வான பகுதியில் வசிக்கும் இப்பகுதிக்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் கடந்த பல வருடங்களுக்கு முன் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த காங்கிரீட் நடைபாதை தற்போது பழுதாகி குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் நடைபாதையில் செல்வதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள்,கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வரும் நடைபாதையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்ககாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடைபாதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: