தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். முக்காணி பகுதியில் சாந்தி, பார்வதி, அமராவதி, சண்முகத்தாய் ஆகியோர் தண்ணீர் பிடித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார், சாலையோரம் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த 4 பெண்கள் மீது மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சண்முகத்தாய் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: