கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதில்

சென்னை: “சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று ‘எதிர்காலத்தில் நடக்காது’ என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு” என கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதில் அளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச் சாராய சம்பவம் வருந்தத்தக்கது. தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சி, ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று ‘எதிர்காலத்தில் நடக்காது’ என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு” என தெரிவித்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: