ஜெகன் மோகன் ஆட்சியில் அவமானப்படுத்திய சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவை சென்றார்

*எம்எல்ஏவாக பதவி ஏற்பு

திருமலை : ஜெகன்மோகன் ஆட்சியில் அவமானப்படுத்திய சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவைக்கு சென்றார். தொடர்ந்து முதல்வர் உட்பட வெற்றிபெற்ற அனைவரும் எல்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.ஆந்திர மாநில சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் முதலில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இதனை தொடர்ந்து துணை முதல்வர் பவன் கல்யாண், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

கடந்த 2021 ஆண்டு நவம்பர் 21ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை ஏளனமாக பேசி கிண்டல் செய்தனர். இதனால் மனமுடைந்த சந்திரபாபு நாயுடு கவுரவமான சட்டப்பேரவையில் ஏளனமாக கேலி கிண்டல் செய்து சட்டப்பேரவைக்கும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் இந்த அவைக்கு முதல்வராக மட்டுமே வருவேன் என்று கூறி சபதம் மேற்கொண்டு வெளியேறினார்.

அதன் பிறகு தற்போது தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று சட்டப்பேரவைக்குள் சென்றார். சந்திரபாபு 4 முறையாக முதல்வர் என்ற பெருமையுடனும் முதல்வராக 164 கூட்டணி எம்.எல்.ஏக்கள் மத்தியில் சந்திரபாபு சட்டப்பேரவைக்குள் சென்றார். உள்ளே கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கவுரவ சபை என்று நிரூபித்த சந்திரபாபு, நிஜம் வென்றது, ஜனநாயகம் வென்றது என கோஷமிட்டு சந்திரபாபுவை வரவேற்றனர். இதனையடுத்து பவன்கல்யாண் முதல்வர் சந்திரபாபுவை கட்டித் தழுவி வரவேற்றார்.ஏற்கனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவும் தற்போது சட்டப்பேரவையில் முழுபலத்துடன் எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சட்டப்பேரவைக்கு மீனவனாக வந்த எம்எல்ஏ

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் தொகுதியில் ஜனசேனா கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் மொம்மிஇ நாயக்கர். மீனவ குடும்பத்தில் பிறந்து மீனவ சமூதாயத்தில் வளர்ந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு செல்வதால் மீனவர் வேடமணிந்து பொம்மிடி நாயக்கர் மீன், வலையுடன் மீனவனாக புதுமையான முறையில் சட்டசபைக்குள் சென்றார். இது அனைவரையும் வியக்க செய்தது.

The post ஜெகன் மோகன் ஆட்சியில் அவமானப்படுத்திய சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவை சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: