நாடாளுமன்றம், திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு சென்றார். அப்போது, மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, நாடாளுமன்றத்துக்கு வந்ததன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியதாக அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக உள்ளவரிடம், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிப்பதாகவும் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கேட் கோகுலே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நேற்று பிற்பகல் நாடாளுமன்றம் சென்ற எம்.எம்.அப்துல்லாவை சிஐஎஸ்எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தி எதற்காக உள்ளே செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் நாடாளுமன்றம் செல்கிறீர்கள் என கேட்டது. திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

நாடாளுமன்றம் செல்வதற்கு அனைத்து உரிமைகளும் உறுப்பினருக்கு உள்ளது. இந்தியா கூட்டணி எம்.பி.க்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப்-க்கு மாற்றப்பட்டதா?. நாடாளுமன்றம் என்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட சொத்து அல்ல. எம்.பி.க்களை தடுத்து நிறுத்தி விசாரிப்பதற்கு மோடி, அமித் ஷாவின் தனிப்பட்ட சொத்து அல்ல நாடாளுமன்றம். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா எதற்காக தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது பற்றி சிஐஎஸ்எஃப் இயக்குநர் பதில் அளிக்க வேண்டும். எம்.பி.யை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எஃப் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

The post நாடாளுமன்றம், திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: