ரூ.100 கோடி செலவில் உருவாகும் லூசிஃபர் 2

சென்னை: நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் நடித்தனர். இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. அரசியல் திரில்லர் படமான இது, மலையாள திரையுலகில் ரூ.150 கோடி வசூலித்த முதல் படமாக சாதனை படைத்தது. இதையடுத்து இந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்நிலையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி படத்தின் ஸ்கிரிப்ட்டை பிருத்விராஜ் முடித்துவிட்டார்.

இப்போது லொகேஷன் பார்ப்பதற்காக லண்டனுக்கு சென்றுள்ளனர். முதல் பாகம் முழுக்க கேரளாவில் படமானது. இரண்டாம் பாகத்தின் முக்கிய காட்சிகளை லண்டனில் படமாக்க உள்ளனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை ரூ.100 கோடி செலவில் உருவாக்க பிருத்விராஜ் திட்டமிட்டுள்ளார். முதல் பாகத்தை போல், இரண்டாம் பாகத்தையும் தமிழில் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. லூசிஃபர் 2 படத்துக்கு எம்புரான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

The post ரூ.100 கோடி செலவில் உருவாகும் லூசிஃபர் 2 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: