வயநாடு எம்பி பதவி ராகுல் ராஜினாமா ஏற்பு

புதுடெல்லி: வயநாடு எம்பி பதவியை ராஜினாமா ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 4ம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள் (ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இதுகுறித்து மக்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக்கொண்டு வயநாடு தொகுதியை காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வௌியாகும் என்று கூறப்படுகிறது.

The post வயநாடு எம்பி பதவி ராகுல் ராஜினாமா ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: