கல்யாண ஏற்பாடுகளை செய்தபோது மணப்பெண்ணின் சகோதரி திடீர் சாவு: திருமணம் நின்றது

கருங்கல்: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகன்பால் (38). இவரது மனைவி பிரபா (34). பிரபாவின் தங்கைக்கும், கருங்கல் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இவர்களின் திருமணம் நேற்று காலை, கருங்கல்லில் உள்ள கிறிஸ்தவ சபையில் நடக்க இருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மணப்பெண் அழைப்புக்கு முன் வீட்டு வாசலை சுத்தம் செய்ய பிரபா வந்தார். வீட்டு முன் போடப்பட்டு இருந்த பந்தலையொட்டி இருந்த குப்பைகளை அகற்றி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மார்த்தாண்டத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், பிரபா உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. வீட்டுகு முன்பு போடப்பட்டிருந்த பந்தலில் இருந்த சீரியல் விளக்குகளில் இருந்து மின்சாரம் பாய்ந்து பிரபா உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே பிரபா எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் போலீசார் கூறி உள்ளனர்.

The post கல்யாண ஏற்பாடுகளை செய்தபோது மணப்பெண்ணின் சகோதரி திடீர் சாவு: திருமணம் நின்றது appeared first on Dinakaran.

Related Stories: