முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நில உடைமை ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு “தமிழ்நிலம்” எனும் இணையம் மூலமாக இணையவழி பட்டா மாறுதல் ஆணைகள் வருவாய்த்துறை அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது இணையவழியில் https://eservices.tn.gov.in என்ற இணைய முகவரியில் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்து பட்டா மாறுதல் உத்தரவுகளை பெற்று வருகின்றனர். இதில் பட்டா மாறுதல் கோரும் மனுவின் மீதான நடவடிக்கையானது குறுஞ்செய்தி மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

பட்டா மாற்றம் கோரும் மனுக்கள் இரண்டு வகைப்படும். ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டாமாற்றம், மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம். இதன்படி, உட்பிரிவுடன் கூடிய பட்டாமாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும், உட்பிரிவு இல்லாத நேரடிப்பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும் தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு அவற்றின்மீது உரிய கால அளவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றது முதல், மூன்று ஆண்டுகளில் இணையவழியில் 81.76லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இச்சேவைகளை கூடுதலான வெளிப்படைத் தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 2024ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் ‘முதலில் வருவோருக்கு முதலில் சேவை’ என்ற நடைமுறையில் ஜூன் 4 முதல் 16ம் தேதி வரை 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் ‘முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, 2 வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும்.

The post முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: