அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல்

சென்னை: நான் முதல்வன் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்திய ஸ்கவுட் திட்டத்தில் இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று சென்னை திரும்பிய 25 மாணவ, மாணவியர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். பிறகு அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினர்.
* ஈரோடு, எம்.பி.நாச்சிமுத்து ஜெகன்நாதன் பொறியியில் கல்லூரியில் இசிஇ துறையில், 3வது வருடம் படித்து வரும் மாணவி பேசியதாவது: நான் அரசு பள்ளியில் படித்ததால், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் முழு பயனையும் அடைகிறேன். தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக படிக்க முடியும் என்பதால்தான் பொறியியல் படிப்பையே என்னால் தொடங்க முடிந்தது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக நிறைய கோர்ஸ் இலவசமாக கிடைத்தது. அதை நாங்கள் பயன்படுத்தி படிக்கும்போது எங்களுக்கு இன்னும் நன்மையாக இருந்தது. எங்கள் அறிவை வளர்த்துக் கொண்டோம். அதேபோல், இந்த ஊக்கத்தொகையை நான் மாதந்தோறும் பெறுவதால் அதை சேமித்து என்னுடைய 3வது வருடம் மினி பிராஜக்டை நிறைவு செய்ய முடிந்தது.

* மற்றொரு மாணவன்: நான் முதல்வன் திட்டம் தொடங்கிய நாள் முதலே இதில் பயனடைந்து வருகிறேன். ஐஓடி போன்ற பல்வேறு டெக்னாலஜி படிப்புகள் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் இங்கிலாந்து சென்றதால் International Programme-க்கான Access கிடைத்துள்ளது. அங்கிருந்த International Professors, Researchers உடன் கலந்துரையாடியது மிகவும் உதவியாக இருந்தது. நான் இப்போது நேர்காணலுக்கு அணுகினால் நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால், வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

* பொறியியில் கல்லூரி இறுதி ஆண்டு பிடெக் ஐடி மாணவன் பாலாஜி: “நான் முதல்வன்” திட்டம் எனக்கு இரண்டாவது ஆண்டு முதல் தொடங்கினார்கள். நான் படித்தது augmented reality மற்றும் virtual reality எனக்கு அப்போது அதில் விருப்பம் இல்லை. ஆனால், அந்த படிப்பு முடிந்த பிறகு, இப்படி ஒரு களம் இருக்கிறது, இதனால் என்னுடைய அறிவு வளர்ச்சியடையும் என்று நினைத்தேன். இந்த படிப்பு முடிந்த பிறகு நிறைய போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். இங்கிலாந்தில் ஒரு நாள் ஒரு Objective எடுத்து குழு, குழுவாகப் பிரித்து நீங்கள் செய்யுங்கள் என்றார்கள். அவர்கள் செய்வதும், நாம் செய்வதும் ஓரளவுக்கு ஒன்றாக இருந்தது. அதனால், நாங்கள் நிச்சயமாக அவர்களின் நிலைக்கு எட்டுவோம். இந்த வாய்ப்பு மிகவும் உதவியாக இருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நான் முதல்வன் திட்டத்தை இன்னும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஏதேனும் யோசனைகள் இருக்கிறதா? ஏதேனும், கருத்து இருந்தால் கூறவும்.
பாலாஜி: ஏற்கனவே இருப்பது போல் இன்னும் அதிகமாக Hackathon நடத்தலாம். Competitions அதிகமாக நடத்த வேண்டும். மாணவர்களே படிப்புகளை தேர்வு செய்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும். Depth wise, Breath wise போகக் கூடிய சுதந்திரம் இருந்து ஒரு தொடர்ச்சி இருந்தால் beginner, advance and research ஆக அவர்கள் போகக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.

* வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படிக்கும் மாணவி ரேணுகா: “நான் முதல்வன்” திட்டம் நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வந்தது. அதில் Microsoft Excel, Powerpoint போன்ற படிப்புகள் எல்லாம் இருந்தது. இத் திட்டத்தின் மூலம் SCOUT-ல் செலக்ட் ஆவதற்கு முன்பு இருந்த தன்னம்பிக்கையை விட தற்போது வெளிநாடு சென்று வந்த பிறகு என் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. அதனால் தான் நான் உங்கள் முன்பாக பேசுகிறேன்.

* வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவன் யோகேஷ்வரன்: துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழுவாக அமைத்து Team Communication, Team building என்று modern approach ஆக இருக்கிறது. முதலில் நாங்கள் எப்படி செய்யப்போகிறோம் என்று பயந்துகொண்டு தான் இருந்தோம். ஆனால் நாங்கள் எல்லோரும் மிகவும் நன்றாகவே செய்தோம். அதற்கு காரணம் “நான் முதல்வன்” திட்டம் தான்.

* செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவகாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவி சுஜாதா: நான் 2ம் ஆண்டு படிக்கும்போதே திருமணமாகிவிட்டது. திருமணமாகி விட்டதால் உன்னால் முழுமையாக படிக்க முடியாது, இடையில் படிப்பை நிறுத்திவிடுவாய் என்று சொன்னார்கள். “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக இந்த மேடையில் நான் நிற்பது அவர்களின் கேள்விக்கு விடையாக இருக்கும். மாணவ, மாணவியர் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கும், “நான் முதல்வன்” குழுவிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் நன்றி. இவ்வாறு கலந்துரையாடல் நடந்தது.

The post அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: