நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பு எனவும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்வி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அவ்வகையில், தற்போது பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பயிற்சிகளுக்காக 15 பொறியியல், 10 அறிவியல் மாணவர்கள் என மொத்தம் 25 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, லண்டனில் உள்ள நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், லண்டனில் உள்ள துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழகத்தை சேர்ந்த 25 மாணவ-மாணவிகளும் வெற்றிகரமாக முடித்தனர். பின்னர் நேற்றிரவு லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் 25 மாணவ-மாணவிகளும் வந்திறங்கினர். விமான நிலையத்தில் ஒரு வார திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி முடித்த 25 மாணவ-மாணவிகளை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: