மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சம் காரணமாக கிராமத்து பெண்கள் படும் அல்லல்கள் காண்போரை வேதனை அடைய வைக்கின்றன. மும்பை நகரத்திலிருந்து வடகிழக்கு பகுதியில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமையான நகரமான நாசிக் தற்போது கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. இங்குள்ள கிராமங்களில் வாழும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள மிகவும் ஆழமான மற்றும் ஆபத்தான கிணறுகளில் பெண்கள் இறங்கி தண்ணீரை சேமித்து வருகின்றனர்.

மிக மிக அழுக்காக காணப்படும் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கும் நிலைக்கு நாசிக் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் சேகரிப்பதற்கு மட்டும் கிராமத்து பெண்கள் பல மணிநேரம் செலவிடும் காட்சிகள் காண்போரை வேதனை அடைய வைத்துள்ளன. பல ஆண்டுகளாக கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான நிரந்தர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாகும். உயிரை பணயம் வைத்து தண்ணீர் எடுக்கும் தங்களுக்கு எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற வேதனை குரல்கள் நாசிக் நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளன.

The post மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: