திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் மீண்டும் லேசான நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை சுமார் 8.15 மணியளவில் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டத்தில் திருத்தாலா, திருமிற்றக்கோடு, கக்காட்டிரி, குமாரநல்லூர், ஆலூர், சாலிசேரி உள்பட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம், குருவாயூர் எருமப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும், பூமிக்கு அடியில் இருந்து முழக்கம் கேட்டதாகவும் இந்த பகுதியினர் கூறினர்.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்றும் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னங்குளம், எருமப்பட்டி, வேலூர் உள்பட சில பகுதிகளிலும், பாலக்காடு மாவட்டத்தில் வடக்காஞ்சேரி, திருத்தாலா, திருமிற்றக்கோடு ஆகிய இடங்களிலும் இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

The post திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் மீண்டும் லேசான நில அதிர்வு: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: