நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: நடப்பாண்டு நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடி உள்ளார். ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “ தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீட் தேர்வு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். இதனால் சிபிஎஸ்இயில் படிக்காத மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தை முன்வைத்தனர். தற்போது இந்த விவகாரம் பற்றி சரியான மறுஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.

மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலும் தற்போது, “நீட் தேர்வு பாரபட்சமானதா? ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய தேர்வு முகமையின் நேர்மை, நீட் தேர்வு வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.  நாடாளுமன்றத்தில் புதிய நிலைக்குழுக்கள் அமைக்கப்படும்போது, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு, என்சிஆர்இடி ஆகியவை பற்றிய ஆழமான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

The post நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: