திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி, ஜூன் 16: திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 22வது வார்டில் ராதாகிருஷ்ணன் காலனி உள்ளது. இந்த காலனியில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் விருதுநகர் மெயின் ரோட்டில் இருந்து காலனிக்குள் செல்லும் சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இந்தபள்ளம் அமைந்துள்ள சலையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வழியாக கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் மக்கள் சென்று வருகின்றனர். தொழில் நிறுவனங்களுக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.

நீண்ட நாட்களாக இந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். மழை காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர்.மழை காலங்களில் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்றால் நடந்து செல்லும் பொதுமக்கள் தண்ணீர் தெரித்து ஆடைகள் அழுக்காகின்றன. இந்த சாலையை சீரமைக்கக்கோரி மாநகராட்சியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அபாய பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: