திண்டுக்கல்லில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு

திண்டுக்கல் ஜூன் 22: திண்டுக்கல் மாவட்ட உள் விளையாட்டரங்கில் 10வது சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு யோகாசன சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம், சங்கமம் யோகா ஆரோக்கிய மையம் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்க தலைவர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட விளையாட்டு அரங்க நடை பயிற்சியாளர் சங்க தலைவர் சண்முகவேல், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சரண் கோபால், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டி அசத்தினர். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத் கனி, மாவட்ட கால்பந்து கழக துணை தலைவர் ரமேஷ் பட்டேல், மாவட்ட கேரம் கழக தலைவர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட யோகாசன சங்க செயலாளர் நித்யா செய்திருந்தார். மாவட்ட யோகாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: