வாலிபரிடம் செல்போன் பறிப்பு

சேலம், ஜூன் 22: சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்காக ஈரோட்டை சேர்ந்த தினேஷ்(19) என்பவர் வந்திருந்தார். சமையல் பணி முடிந்து ஊருக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு உத்தமசோழபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 2 பேர், வாலிபர் தினேசிடம் பேசிக்கொண்டே அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: