கொடைக்கானல் ஜமாபந்தியில் 180 மனுக்கள் பெறப்பட்டது

கொடைக்கானல், ஜூன் 22: கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளுக்கு ஜமாபந்தி என்ற வருவாய் தீர்வாயம் 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கொடைக்கானல் ஆகிய கிராமங்களுக்கும, இரண்டாம் நாள் வெள்ளகெவி, அடுக்கம், பூலத்தூர், பண்ணைக்காடு, வடகவுஞ்சி ஆகிய கிராமங்களுக்கும், மூன்றாம் நாள் தாண்டிக்குடி, காமனூர், கேசி பட்டி, பெரியூர், பாச்சலூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடந்தது. இதில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டன. 49 மனுக்கள் பட்டா மாறுதல் கோரியும், 23 மனுக்கள் வீட்டுமனை பட்டா கோரியும் விண்ணப்பம் செய்திருந்தனர். விரைவில் இதற்கான தீர்வுகள் காணப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

The post கொடைக்கானல் ஜமாபந்தியில் 180 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: