கழுகுமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

கழுகுமலை, ஜூன்22: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி தினமான நேற்று அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை, மற்ற பிற கால பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் இருந்து தொடங்கி கிரிவலபாதயில் மலையைச்சுற்றி கிரிபிரகார வீதி வழியாக கோயிலை வந்தடைந்தனர். இதையடுத்து கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. தெடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் பவுர்ணமி கிரிவலக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post கழுகுமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Related Stories: