தொலைந்த செல்போனை பயன்படுத்தி பெண் ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ₹1.16 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர், ஜூன் 16: தொலைந்த செல்போனை பயன்படுத்தி பெண் ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ₹1.16 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரை சேர்ந்த 32 வயது தனியார் நிறுவன பெண் ஊழியர் தனது சொந்த ஊருக்கு செல்லும்போது பஸ்சில் தனது செல்போனை தொலைத்துள்ளார். இவரது தொலைந்த செல்போனை பயன்படுத்தி இவரது வங்கி கணக்கில் இருந்து ₹1 லட்சத்து 15 ஆயிரத்து 900 அபேஸ் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எஸ்பி மணிவண்ணனிடம் புகார் அளித்தார்.

இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புனிதா, எஸ்ஐ சதீஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ‘செல்போன் தொலைந்ததும் தங்களது செல்போன் எண்ணை சம்பந்தப்பட்டவர்கள் முடக்க வேண்டும். இதன் மூலம் பல இழப்புகளை தவிர்க்க முடியும். அல்லது மத்திய அரசின் www.ceir.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்’ என்றனர்.

 

The post தொலைந்த செல்போனை பயன்படுத்தி பெண் ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ₹1.16 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: