பாபநாசம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கோவில் தேவராயன்பேட்டை அருள்மிகு ஸ்ரீமச்சபுரீஸ்ரர் கோயில் அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது ஒரே இடத்தில் பழைமையான 13 ஐம்பொன் சாமிசிலைகள் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துதாசில்தார், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஐம்பொன் சிலைகளை கைப்பற்றி மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அதே இடத்தில் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து அதே இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த சுற்றுபகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் நேரில் கூட்டம் கூட்டமாக வந்து சிலைகளை பார்த்து செல்கின்றனர். சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பரபரப்படைந்துள்ளது.

The post பாபநாசம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: