கோவை முப்பெரும் விழா திமுக மாணவர் அணியினர் திரண்டு வர வேண்டும்: சி.வி.எம்.பி.எழிலரசன் அழைப்பு

சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவாகவும், திமுக தலைவரும், இந்தியா கூட்டணி, தமிழ்நாட்டில் நாற்பதுக்கு நாற்பது இடங்களில் வெற்றிக்கு ஓயாமல் உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நாளை மாலை 4 மணியளவில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடக்கிறது. இதில், திமுக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள், மாணவர் அணி மீதும் ஈடுபாடு கொண்ட நண்பர்களையும் பெருந்திரளாக அழைத்துக் கொண்டு திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க அடலேறுகளே அணி திரண்டு வாரீர், வாரீர் என அன்போடு அழைக்கின்றேன்.

The post கோவை முப்பெரும் விழா திமுக மாணவர் அணியினர் திரண்டு வர வேண்டும்: சி.வி.எம்.பி.எழிலரசன் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: