பாஜக உட்கட்சி பூசல்: தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித் ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பாஜ போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்குட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளிலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை. பாஜவின் 4 எம்எல்ஏக்கள் தொகுதியிலும் மக்கள் மண்ணைத்தான் கவ்வச் செய்துள்ளனர். சொந்த தொகுதியிலேயே பாஜவினர் கடும் பின்னடைவை சந்தித்தது, பாஜவினர் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பையை காட்டுகிறது. இது பாஜவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ளார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித் ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார்.

சமாதானப்படுத்துவது போல் தமிழிசை விளக்கம் அளித்தாலும் அதனை ஏற்க மறுத்து அமித் ஷா கோபத்தை வெளிப்படுத்தினார். தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் அமித் ஷா அதிருப்தி வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பாஜக உட்கட்சி பூசல்: தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா appeared first on Dinakaran.

Related Stories: