ஏழ் கடலை அழைத்த காஞ்சனா மாலை

தேவலோகம் என்று அழைக்கப்படும் தேவேந்திரனின் சபை மிகவும் அழகாகவும், குளிர்ந்த விருட்சங்கள் சூழ்ந்து ஆடல், பாடல்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். ஒரு சமயம், தேவேந்திரன் மமதையோடு இந்திரலோகத்தைச் சுற்றி உலா வந்தான். தேவர்கள் அளித்த பொருள்களை எல்லாம் மிக சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, முகத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

துர்வாசமுனிவர் இட்ட சாபம் துர்வாசமுனிவருக்கு அற்புதமான சிவன் சூடி தாமரை மாலை தனக்கு கிடைக்க; அதை தேவேந்திரனுக்கு கொடுத்தார். அவருடைய போதாத நேரம், அதை வாங்கி அலட்சியமாக ஐராவதத்தினிடம் கொடுக்க, அந்த யானையோ, தன் காலில் போட்டு மிதித்துவிடுகின்றது. தேவேந்திரன் மீது துர்வாசருக்கு கோபம் ஏற்பட்டது, “தலைக்கனம் பிடித்த தேவேந்திரா! உன் அகங்காரத்தை பாண்டிய மன்னன் அடக்குவான். கர்வம் பிடித்த உன் தலையை சிதைத்து, உன் ஆணவத்தை அழித்துவிடுவான்” என்று சாபம் விடுகிறார். வெள்ளை யானையை (ஐராவதம்) பார்த்து, “பூவுலகில் சென்று, நூறு வருடங்கள் கடுமையாக உழைத்து நிறம் இழந்து வெயில் மழையில் உழலுவாய்’’ என்று சாபம் இட்டார்.

தேவேந்திரனே அழிந்தால், தேவலோகம் எது? தேவேந்திர பதவிதான் ஏது? என்று தேவர்கள் திகைத்தனர். தேவேந்திரனுக்கு பாண்டிய மன்னனால் துயரம் வரும் என்று அறிந்து, அவர் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். சினம் தணிந்த முனிவர், “தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போகும், தலைமணி முடியோடு போகட்டும், உயிர் பிச்சை தருகிறேன்’’ என்று கூறினார். பாவகர்மா சாபத்தை ஏற்றுக்கொண்டு, பூவுலகில் இருவரும் பயணித்தனர்.

(இந்திரன் கொடுத்த மணிமுடி பாண்டியர் பெற்றனர். அதை இலங்கை மன்னன் மகிழந்தன் மூதாதையர் கையில் ஒப்படைத்தார். தமிழரின் மணி முடியை மீட்க ராஜராஜசோழன் காலத்தில் இருந்து போர் தொடங்கியதாக வரலாறு கதை உண்டு வேங்கையின் மைந்தன் அகிலன் எழுதியதில் அறியலாம்) கடம்பவனத்தின் சிறப்புவெள்ளை யானை கடம்பவனம் என்கின்ற இடத்தில், கருப்பு நிறமாக மாறியது. கொம்பாலாகிய தந்தத்தை உடைத்து, மண்ணை தூர்வாரி, கரை அமைத்து ஒரு குளத்தை வெட்டியது. அந்த இடம் கடம்பவனம் எனப்படுகின்றது. இங்கு சிவன் சுயம்பாக தோன்றினார். சிவபெருமானை வணங்கி, சில காலம் இருந்து, சாபம் நீங்கி, மேல் உலகம் சென்றது.

இந்திரன் சுயம்புக்கு குடையாக வெயில் மழை எதுவும் படாமல் பாதுகாக்க திசை எட்டும் யானை வீற்றிருப்பது போல ஒரு விமானத்தை அமைத்துக் கொடுத்து சாபம் நீங்க பெற்றான். விமானத்தின் கீழ் சிவபெருமான் வீற்றிருக்க தெய்வீக நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. குலசேகர பாண்டியன் செய்த திருப்பணிகடம்பவனம் கிழக்கே மணவூர் என்கின்ற பகுதியை பாண்டிய மன்னன் குலசேகரன் ஆட்சி செய்து வந்தான். பாண்டியன் நீதி தவறாமல் எப்பொழுதும் மக்களுக்கு நல்லதையே செய்து வருகின்ற பொழுது, ஆட்சி காலத்தில் மக்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தனர். பாண்டிய நாட்டில் வாழ்ந்தவன் தனஞ்செயன் என்னும் வணிகன். இவன் செல்வ செழிப்பில் சிறந்து விளங்கினான்.

வணிகன், வியாபார நிமித்தமாக மேற்கே உள்ள அசல் ஊருக்குச் சென்று, வியாபாரத்தை முடித்து திரும்பினான். இரவு ஆகிறது, இருட்டில் காட்டை கடந்து நகரத்திற்கு வரும் பொழுது, எங்கே தங்குவது? என்று யோசித்தான். தூரத்தில் யானை தாங்கிய விமானத்தில், சிவன் தென்பட்டார். இறைவன் நமக்கு துணை இருப்பார் என்று கருதி அங்கே தங்கினான். நட்ட நடு நிசியில், திடீரென்று நறுமணம், நாற்புறம் வீசவும் விழித்து எழுந்தான். விண்ணில் வாழக்கூடிய தேவர்கள், பூவுலகிற்கு விமானத்தில் வந்து இறங்கினர். கையோடு கொண்டு வந்திருந்த நறுமணப் பொருள்களும், மலர்கள் கொண்டு அபிஷேகம் செய்து சுவையான அமுது படைத்து வணங்கினர். தெய்வீக காட்சியைக் கண்டு வியந்தான் தனஞ்செயன். இப்பூஜையில்கலந்து கொண்டான்.

கனவில் சிவசித்தர்

பாண்டிய மன்னன் குலசேகரன் கனவில், சிவசித்தர் தோன்றினார். தனக்கு ஒரு கோயிலை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எப்படி கோயில் அமைப்பு இருக்க வேண்டும் என்றும்கூறி மறைந்தார். தனஞ்செயன் தியானத்தில் ஆழ்ந்தான். பொழுது புலர்ந்தது, அருகில் யாரும் இல்லை. தம் ஊர் அடைந்தான். மன்னரிடம் நடந்ததைக் கூறினான். மன்னன் பெரும் மகிழ்ச்சி கொண்டு சிற்பிகளையும், கட்டிடம் கட்டுபவர்களையும் அழைத்துக் கொண்டு, படையோடு கடம்பவனம் சென்றார். சிவபெருமான் அழகான தோற்றம் மனதிற்கு நிம்மதி கொடுத்தது. கனவில் தோன்றிய சிவசித்தர், பாண்டிய மன்னன் முன்தோன்றினார்.

எங்கெங்கே எப்படி கோயில்களை அமைக்க வேண்டும் என்பதனை எல்லாம் அவர் எடுத்துக் கூறுகின்றார். உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், மதில்கள், கோபுரதோற்றம், வேதகல்வி பயிலும் மண்டபம், நாதமண்டபம், பறைபயிலும் மண்டபம், விழாகோலமண்டபம், வேள்விச் சாலை, மடைப் பள்ளி அத்தாணி மண்டபம், வசந்த மண்டபம் என்று ஒவ்வொன்றாக கூறினார். மேலும், கிழக்கிலே ஐராவத நகரை உருவாக்கி மக்கள் எல்லாம் குடியேறவும் வழி செய்தார். மீனாட்சியம்மன் கோயிலும் கட்டி அந்த இடத்திற்கு மதுரை என்ற பெயரையும் சூட்டிவிட்டு மறைந்தார்.

மலையத்துவஜன் பிறப்பு

இறைவனின் அருட்கடாட்சத்தால், குலசேகர பாண்டிய மன்னருக்கு ஓர் அழகிய புத்திரன் பிறக்கிறான். அக்குழந்தைக்கு மலையத்துவஜன் என்கின்ற பெயரைச் சூட்டி மகிழ்கின்றனர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றான். மன்னர், இவருக்கு இணையான அழகிய பெண்ணைத் தேடி திருமணம் செய்து வைக்க விரும்புகின்றார். சந்திரன் குலத்தில் தோன்றிய மலைத்துவஜனுக்கு, சூரிய குலத்தில் தோன்றிய சுரசேனன் என்பவரின் மகள் காஞ்சனா மாலையை திருமணம் செய்து வைக்கின்றனர். காஞ்சனா மாலை, கருணை மிக்கவள். உமையவள் மீது அதீத பக்தி கொண்டவள். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் சென்று வணங்கி வரக் கூடியவள். குலசேகர பாண்டியன், தன் மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, சிவலோகப் பதவியை அடைகின்றார்.

அதன்பின், அழகிய குழந்தையைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றாள் காஞ்சனா மாலை.

காஞ்சனா மாலை என்பவள் யார்?

கானகத்தில் அகத்தியர், தம்முடைய சீடர்களுக்கு ஏனைய முனிவர்களுக்கும் சிவபெருமானின் திவ்ய ரூபத்தைப் பற்றி விளக்கி வரும் பொழுது, காஞ்சனா மாலையின் பெருமையைப் பற்றி விளக்கினார். விசுவாவசு வித்தியாதரன், தேவலோகத்தில் யாழ் இசைக்கும் காந்தருவன். சிவபெருமானின் மீது பக்தியோடு இருப்பவன். இவனுக்கு ஓர் அழகிய மகள் பிறந்தாள். வித்யாவதி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தான். இவள் உமையவளின் மீது பக்திகொண்டு வாழ்பவள். தினமும் யாழை மீட்டி பாடலைப் பாடி அர்ச்சனை செய்வாள்.

இவ்வாறு தினம் செய்தும் அன்னை மனம் கனியவில்லை. தந்தையை நோக்கி அன்னை மனம் கனிய நான் என்ன விரதம் இருக்க வேண்டும் என்று கேட்கிறாள். வித்யாதரன், உயர்ந்த விரதமான தை முதற்கொண்டு, மார்கழி வரை நீ நோன்பு நோற்றால், நீ எண்ணியது நிறைவேறும் என்று கூறினார். அவ்விரதத்தை எவ்வாறு கடைப் பிடிக்க வேண்டும் என்று கேட்டாள். வித்யாதரன் தன் மகளுக்கு விரத முறையைக் கூறினார்.

பொன்முகரியன்

The post ஏழ் கடலை அழைத்த காஞ்சனா மாலை appeared first on Dinakaran.

Related Stories: