ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

இப்பூவுலக வாழ்வில் பண நெருக்கடி இன்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவர் மத்தியிலும் காணப்படும்.ஆனால் அனைவருக்கும் அவரவர் எண்ணப்படியே வாழ்க்கைப் பயணம் அமைந்துவிடுவதில்லை. பணம் தாராளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும்.வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும். கோடீஸ்வர யோகம் அமைய வேண்டும் என்றால் அதற்கு சுக்கிரனின் அருட்பார்வை, மகாலட்சுமியின் அருட் கடாட்சம் எப்போதும் நம்முடைய வீட்டில் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்.இதற்கு வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். மகாலட்சுமியின் அருள் கிடைக்க இவற்றை தொடர்ந்து செய்து பாருங்க.

பணம் வர வெள்ளிக்கிழமை வழிபாடு வெள்ளிக்கிழமை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரம் சுக்கிர ஹோரை நேரமாகும். இந்த நேரத்தில் வீட்டில் மகாலட்சுமி தனியாக இருக்கும் படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பச்சை பட்டுடுத்திய மகாலட்சுமி, அமர்ந்த நிலையில் இருப்பது மேலும் சிறப்பினை ஏற்படுத்தும். அந்த படத்திற்கு அருகில் முகம் பார்க்கும் கண்ணாடியை வையுங்கள்.சதுர கண்ணாடியாக வைத்து, மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் நெய் தீபம் ஏற்றி வையுங்கள். அந்த கண்ணாடிக்கு முன் ஒரு வெள்ளி தட்டில் பழங்கள் வைக்க வேண்டும்.வெள்ளி தட்டு இல்லாதவர்கள் செம்பு, பித்தளை ஆகியவற்றாலானத் தட்டுக்களை பயன்படுத்தலாம்.

பழங்களுக்கு அருகில் நாணயங்கள் சிலவற்றை உப்பு தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து வைக்க வேண்டும்.பழங்கள் மற்றும் நாணயங்களுக்கு நடுவில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, “ஓம் மஹாலக்ஷக்மியை நம” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டு, அந்த கண்ணாடியில் பழங்கள் மற்றும் நாணயங்களுடன் சேர்த்து, உங்களின் முகத்தையும் அந்த கண்ணாடியில் பார்க்க வேண்டும்.இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை தோறும் செய்து வந்தால் மகாலட்சுமி அருள் வீட்டில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்.பணம் வந்து கொண்டே இருக்க தினமும் காலையில் எழுந்ததும் பணத்தை எண்ணிப் பார்ப்பது, பணத்தை தொட்டு வணங்குவது, அதன் வாசனையை முகர்ந்து பார்ப்பது, பணத்துடன் பேசுவது போன்றவற்றை தொடர்ந்து செய்து வர வேண்டும்.எனக்கு நிச்சயமாக பணம் வரும் என மனதில் நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயமாக இருந்தாலும் சரி அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். பணத்தை எப்போது உதாசீனமாகவோ, அலட்சியமான போக்குடனோ கையாளக் கூடாது.

The post ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: