பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி ஆட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி ஆட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என நரேந்திர மோடி பேசியதால் மராட்டியத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி பேசியதால் அரசியல் சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. அரசியல் சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்ற அச்சம் ஏற்பட்டதால் மராட்டியத்தில் பாஜக, சிவசேனை, தேசியவாத காங். கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. நேரடியாக மோடி மீது ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டியிருப்பதால் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுளளது. ஏற்கனவே 7 தொகுதிகளில் வென்ற தங்கள் கட்சிக்கு கேபினட் அமைச்சர் பதவி தரவில்லை என ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி தெரிவித்தார்.

The post பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி ஆட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: