நூலகர் வீட்டின் பூட்டு உடைத்து 15 சவரன், ₹80 ஆயிரம் திருட்டு சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு பயிற்சிக்கு பொள்ளாச்சி சென்ற

குடியாத்தம், ஜூன் 10: பயிற்சிக்கு பொள்ளாச்சி சென்ற நூலகர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 15 சவரன், ₹80 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம், தரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்(42). இவரது மனைவி அருணா(37). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், மதன் புதுப்பேட்டையில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த வாரம் துறை சார்ந்த பயிற்சிக்காக பொள்ளாச்சி சென்றார். இதனால் மனைவி அருணா, குழந்தைகளுடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று அருணா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை, ₹80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருணா குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனபேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post நூலகர் வீட்டின் பூட்டு உடைத்து 15 சவரன், ₹80 ஆயிரம் திருட்டு சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு பயிற்சிக்கு பொள்ளாச்சி சென்ற appeared first on Dinakaran.

Related Stories: