தொலையாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா

கருங்கல், ஜூன் 8: கிள்ளியூர் பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி தொலையாவட்டம் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் பேரூர் செயலாளரும், பேரூராட்சி துணை தலைவருமான சத்தியராஜ் தலைமை வசித்தார். திமுக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்திர கலாதரன், ராபின்சன், விபின் ராஜ், அருள்தாஸ், ஸ்டாலின் ராஜ், செல்வராஜ், கிள்ளியூர் பேரூர் அவை தலைவர் ஜெயின் மனோகர், திமுக பேரூர் கிளை செயலாளர்கள் ராஜேஷ், அஜித் பாபு, ராஜ ஸ்டீபன் மோகன்தாஸ், பேரூர் துணை செயலாளர் மரியதாஸ், பேரூர் பொருளாளர் மரிய செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தொலையாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: