திருப்பரங்குன்றம்: விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாணிக்கம்தாகூர் எம்பி நேற்று அளித்த பேட்டியின்போது, ‘பாஜ சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டதால், நட்சத்திர தொகுதி என்று பேசப்பட்ட விருதுநகரில் வெற்றி பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘விடிந்ததற்கு பின் நட்சத்திரங்கள் இருப்பதில்லை. அதுபோல விடியல் வந்துவிட்டது. நட்சத்திரங்களும் சென்னைக்கு சென்றுவிட்டார்கள். தொடர்ந்து சாமானிய மக்களோடு சேர்ந்து என்னுடைய பயணம் தொடரும்’’ என கூறினார். மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில், ‘‘அதிமுகவின் வாக்குகள் பாஜவிற்கு சென்றது மிகவும் ஆபத்தானது. இதுகுறித்து ஜெயலலிதா, எம்ஜிஆரின் தொண்டர்கள் பதற வேண்டும். ராமர் கோயில் கட்டியுள்ள அயோத்தியில் பாஜ தோல்வி அடைந்துள்ளது. உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார்’’ என்றார்.
The post விடியலுக்குப் பிறகு நட்சத்திரங்கள் இருப்பதில்லை: ராதிகாவை கலாய்த்த மாணிக்கம் தாகூர் appeared first on Dinakaran.