தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவை, மதுரை, தேனி, திருப்பூர், விருதுரகர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களிலும், நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது சென்னை வடபழனி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், சோலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் மழைபெய்து வருகிறது.

அதே போல் திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.

The post தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: