ஒரே நாளில் ₹8.20 கோடிக்கு மது விற்பனை அதிகாரிகள் தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், ஜூன் 5: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹8.20 கோடிக்கு மது விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு ₹90 முதல் ₹100 கோடி வரையில் மது விற்பனையாவது வழக்கம். இதில் விழாக்காலங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படும் நாட்களுக்கு முந்தைய நாளிலும் முன்கூட்டியே குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள். இதுபோன்ற நாட்களில் மது விற்பனை அதிகரிக்கும்.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு ேநற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை இருமடங்கு அதிகரித்தது. இதேபோல் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 106 கடைகளில் வழக்கமாக தினமும் ₹3.50 கோடி முதல் ₹4 கோடி வரை மது விற்பனை நடப்பது வழக்கம்.அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 83 கடைகள் உள்ளன. இவற்றில் தினமும் ₹2.80 கோடிமுதல் ₹3 கோடி வரை மது விற்பனை நடக்கிறது.

இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் தினமே பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்திருந்தனர். தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் வேலூர், திருப்பத்தூர் உள்ளடக்கிய டாஸ்மாக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ₹4.80 கோடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹3.40 கோடியும் என ₹8.20 கோடி டாஸ்மாக் மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒரே நாளில் ₹8.20 கோடிக்கு மது விற்பனை அதிகாரிகள் தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: