மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி

மும்பை: மகாராஷ்டிராவில் சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரின் கட்சிகளை உடைத்து, அவர்களது சின்னங்களையும் பறித்து அரசியல் அனாதைகளாகக்க பாஜ முயற்சி செய்தது. ஆனால், நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி சாதனை படைத்தது.

கடந்த 2019 தேர்தலில், பாஜவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான பிளவுபடாத சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தன. பாஜ 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதுபோல் தேசியவாத காங்கிரஸ் 4, காங்கிரஸ் ஒரு இடத்தை பிடித்தன. ஓவைசி கட்சி வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், உத்தவ் தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா 10 இடங்களிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி 7 என 29 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜ கூட்டணியில் பாஜ 11 இடங்களிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 6 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. சாங்கிலி தொகுதியில் விஷால் என்ற பிரகாஷ்பாபு பாட்டீல் வெற்றி பெற்றார்.

இவர், மகாராஷ்டிரா முதல்வராக இருந்த வசந்த்தாதா பாட்டீலின் மகன். காங்கிரசில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார்.
கட்சி சின்னத்தையும் பறித்ததால் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் அப்படியே தங்கள் கூட்டணிக்கு கிடைக்கும் என்று நினைத்த பாஜவின் கணக்கு பொய்த்துப் போனது. புனேயில் உள்ள பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை தோற்கடித்தார்.

The post மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி appeared first on Dinakaran.

Related Stories: