கருத்து கணிப்புகள் பொய்யாகும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்: துரை வைகோ உறுதி

அலங்காநல்லூர்: இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தண்டலை கிராமத்தில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி நாட்டை ஆளக்கூடிய கூட்டணியாக மாறும். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகள் நல்லாட்சி அளித்துள்ளார்.

அதற்கு மக்கள் அளிக்கும் பரிசாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். இந்தியா ஜனநாயக நாடு. ஆனால், இங்குள்ள அரசியல் கட்சிகளை அழிப்பேன். இருக்காது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆணவம், சர்வாதிகாரத்துடன் பேசி வருகிறார்.

ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி தலைமையில் அமையும் ஆட்சியில் அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது’ என்றார். முன்னதாக மதுரை விமானநிலையத்தில் துரை வைகோ கூறுகையில், ‘பாஜ மற்றும் பிரதமர் மோடி பெட்ரோல், எரிவாயு விலை உயர்வை குறிப்பிடாமல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல், மதம், ஜாதி பற்றி பேசி மக்கள் மத்தியில் பிரவினையை உருவாக்கினர்’ என்றார்.

The post கருத்து கணிப்புகள் பொய்யாகும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்: துரை வைகோ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: