திருடர்கள் என கூறிய மோடி தமிழ்நாட்டுக்குள் வர முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ‘தமிழர்களை திருடர்கள் என கூறிய மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வர முடியாது’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் விதி முறைகளை மீறி கன்னியாகுமரி கடலில் தியானம் செய்கிறார். இது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறான விதிமீறல்களுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது, ஜூன் 4க்கு பிறகு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

காந்தி திரைப்படத்தை பார்த்த பின்னர்தான் காந்தியை பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது என மோடி கூறியிருக்கிறார். நல்ல வேளையாக அவரது தாயைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் அவர் மறக்காமல் இருந்தால் சரி. தமிழர்களை திருடர்கள் என கூறிவிட்டு இப்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்திருந்தாலும், அடுத்த முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் தாங்கள் யார் என தமிழர்கள் காட்டுவார்கள். ஜெயலலிதா குறித்து இப்போது சிலர் கூறுவதெல்லாம், அவர்களது அறியாமையையும், அரசியல் வரலாறு அவர்களுக்கு தெரியாது என்பதையுமே காட்டுகிறது. அதிமுக ஆட்சியில், அதானியிடம் இருந்து மட்டமான நிலக்கரியை வாங்கி ரூ.6,000 கோடி ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து மோடியோ, அண்ணாமலையோ பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருடர்கள் என கூறிய மோடி தமிழ்நாட்டுக்குள் வர முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: