துறையூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி சிறுவன் படுகாயம்

 

துறையூர், மே 31: துறையூர் அருகே மின்சாரம் தாக்கியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 15 வயது சிறுவன் காயமடைந்தார். துறையூர் அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். சிற்ப கலைஞர். இவர் நாகலாபுரத்தில் வீடு கட்டி வருகிறார். இவரது கட்டுமானப் பணிக்கு நேற்று மாலை அடைக்கம்பட்டி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் முருகானந்தம்(38) டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து இறக்கினார்.
அப்போது தொட்டியில் தண்ணீர் முழுதும் இறங்கிவிட்டதா என்று பார்க்குமாறு கணேசனின் மகன் பாண்டியனிடம்(15) முருகானந்தம் கூறியுள்ளார். உடனே சிறுவன் பாண்டியன் டேங்கர் லாரி மீது ஏறி பார்த்த போது அருகில் சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து விட்டார்.

அதே நேரம் டிராக்டரை தொட்டுக் கொண்டிருந்த முருகானந்தமும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் முருகானந்தம் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். சிறுவன் பாண்டியன் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திருச்சி தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post துறையூர் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: