திருச்சி தென்னூர் அண்ணா நகரில் பஸ், கார், டூவீலர் அடுத்தடுத்து மோதல்

 

திருச்சி, ஜூன் 18: திருச்சி தென்னூர் அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலுக்கு முன்பு வேகத்தடை போட சொல்லி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் அண்ணாநகர் நலசங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அங்கு வேகத்தடை போடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

அறிவியல் பூங்காவிலிருந்து தனியார் பள்ளிக்கு திரும்பும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் பிரேக் போடாமல் வண்டிகள் வேகமாக செல்கின்றது, இதனால் 4 முனையில் வாகனங்கள் வருவதால் கட்டுப்பாடின்றி விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ்நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பஸ் டூவிலர் மீது மோதியது. மோதிய பஸ்சில் பின்னால் வந்த கார் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் கார் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

The post திருச்சி தென்னூர் அண்ணா நகரில் பஸ், கார், டூவீலர் அடுத்தடுத்து மோதல் appeared first on Dinakaran.

Related Stories: