நீர்தேக்க தொட்டியை பராமரிப்பது எப்படி?

 

துறையூர், ஜூன் 22: துறையூர் வட்டாரம் வீரமச்சான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துறையூர் வட்டார ஊரக வளர்ச்சித்துறை ஆகியன இணைந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி, நீரினால் பரவும் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நலக்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. துறையூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரபாகர் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், ஞானமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

குடிநீரைக் குளோரினேசன் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் கூறப்பட்டு குளோரினேசன் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மாதம் இருமுறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிணை கழுவி சுத்தம் செய்யவும், குடிநீர் கசிவு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. நீர் தேக்கத் தொட்டியில் ஏற்றி குளோரினேசன் செய்து குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் கழித்து குடிநீர் விநியோகம் செய்யவும், பிளிச்சிங் பவுடரை காற்று புகாவண்ணம் பாதுகாத்துப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

The post நீர்தேக்க தொட்டியை பராமரிப்பது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: