அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

 

திருச்சி, ஜூன் 22: திருச்சி ஸ்ரீரங்கம் பிச்சாண்டவர் கோவில் ரயில் நிலைய தண்டவாளம் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே எஸ்.எஸ்.ஐ பாலமுருகன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறந்தவரின் அடையாளம் சுமாா் 65 வயது மதிக்கத்தக்கவர், உயரம்:160 செ.மீ, வலது கை ேதாள்பட்டையில் கீழ் மச்சம், பச்சை நிற அரைக்கை சட்டை, அரக்கு காவி நிற வேஷ்டி, பச்சை நிற மிராசு பெல்ட் அணிந்துள்ளார், மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால் இருப்புப்பாதை காவல் நிலைய எண்ணிற்கு 9942522477 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடிபட்டு பலி appeared first on Dinakaran.

Related Stories: